ஜேம்ஸபாண்ட் திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளிவரவுள்ள நோ டைம் டூ டை பாகத்திற்காக தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கின்றனர். தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் என்றாலே மின்னல் வேக கார் சேஸிங் கட்டாயம் இருக்கும். அந்தவகையில், ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையில், 25வது திரைப்படமான நோ டைம் டூ டை படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இத்தாலியில் உள்ள மதேரா நகரத்தில் கார் சேஸிங் காட்சிகள் எடுக்கப்பட்டன.



ஜேம்ஸ்பாண்ட் காரை, இரண்டு சொகுசு கார்கள், பைக் மற்றும் ஹெலிகாப்டர்கள் துரத்தும் காட்சிகள் படமாக்கப்பட்டன. டேனியல்கிரேக் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது வென்ற ரமி மெல்கி வில்லனாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.