நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து தனது 60-வது படத்தில் நடித்து வருகிறார்.

காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை முழுமையாக முடித்து அஜித்திடம் கூறியுள்ளார் எச்.வினோத். கதை அருமையாக இருக்கிறது.

அதாவது, நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் இந்த படத்திலும்  ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் காட்சிகளைச் சேர்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளாராம்.

எனவே தற்போது இயக்குனர் வினோத் அஜித்துக்கு ஏற்றவாறு கதைகளை மாறி அமைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆக, கூடிய விரைவில் "தல 60" படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.