நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்.



நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

ஜோடியாக வெளியே செல்வது, வெளிநாடுகளுக்கு செல்வது என்று உள்ளனர். இதை பார்க்கும்போது எல்லாம் அன்பான இயக்குநரே நயன்தாராவை எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யப் போகிறார்களாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயம் விரைவில் நடக்க உள்ளது.