சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள தேதியை படக்குழு வெளியிட்டு உள்ளது.



சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இசை வெளியீட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது.



அனைத்து பாடல்கலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து படம் வருகிற 27-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.