தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று ட்வீட் செய்த பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தயவு செய்து ரிலீஸ் தேதி தொடர்பாக எதுவும் கணித்து, வதந்தி பரப்ப வேண்டாம். சென்சாருக்கு பிறகு நாங்கள் அறிவிப்போம். பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்க ஏதுவான நாளை நாங்கள் தேர்வு செய்வோம் என்று தயவு செய்து நம்புங்கள். மேலும் இன்று மாலை 6 மணிக்கு புது போஸ்டர் வெளியிடப்படும் என்றார்.