தெலுங்கு திரையுலகில் வரலாற்றுப் படங்கள் என்றாலே ஒரு தனி வரவேற்பு உண்டு. அப்படிப்பட்ட படங்கள் குறைவாக வந்தாலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சயீரா நரசிம்ம ரெட்டி.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை கொனிடலா நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, கிச்சா சுதீப் என்று மற்ற மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று படம் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.